- கோவையில் நடந்த உலக தமிழ் மாநாடு சற்றே அடுத்த மாநிலங்களை நம் பக்கமாக திரும்பி பார்க்க செய்தது. அங்கே நடந்த சில அரசியல் மற்றும் சுய தம்பட்டங்களை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
- சென்னையில் கட்டப்பட்ட கம்பீரமான மேம்பாலங்கள் நிச்சயமான எதிர்கால தேவைகள்.
- அரசின் இலவச மருத்துவ காப்பீடு - சிறப்பான முறையில் அமுல்படுத்தபட்டது. ஆனால் இப்போதே சில மருத்துவமனைகள் இந்த காப்பீட்டை ஏற்றுகொள்ள மறுக்கின்றனர், எதிர்காலத்தில் வெகு சில மருத்துவமனைகள் மட்டுமே இதை ஏற்றுகொண்டால் மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைப்பது கடினமே.
- ஜவுளி தொழில்நுற்ப பூங்காக்கள் ஒரு சிறப்பான ஆரம்பம். நலிந்த தொழிலுக்கு ஒரு மறுவாழ்வு, அதிக ஊக்கம்.
- புதிய தலைமைசெயலகம் கட்டிடம் திறக்கப்பட்டது.
- தஞ்சாவூர் பெரிய கோவிலின் 1000 மாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
- சென்னை மருத்துவ கல்லூரியின் 175 வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- சென்னையை முழுமையாக இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டது.
- மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நல்ல உற்சாகம் வழங்கப்பட்டது.
2011 இல் அரசு இதற்கு தக்க முக்கியத்துவம் அளிக்கவில்லையெனில் நாட்டில் பணத்திற்கான மதிப்பு வெகுவாக குறைந்து விடும். சாக்கில் பணத்தை கொண்டு சென்று சிறிய பையில் பொருட்களை வாங்கி வரும் நிலை ஏற்பட்டால் ஆச்சரியபடுவதற்கில்லை,
உலகின் அணைத்து மக்களுக்கும் இந்த புத்தாண்டு இனிய புத்தாண்டாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 ....
No comments:
Post a Comment